சித்தமருத்துவமும் நானோ தொழில் நுட்பமும்
இன்றைய நவீன உலகில், நானோ தொழில் நுட்பம் புரட்சி படைத்து கொண்டிருப்பது அறிந்ததே.தகவல் தொழில் நுட்பம் தொடங்கி,விண்வெளி ஆராய்ச்சி,மருத்துவ துறை என பல துறைகளிலும்,கோலோச்சி வருவதும் இயற்கை.
பல அறிவியல் கருத்துகளையும் தன்னகத்தே கொண்ட,சித்த மருத்துவம் கூறுகிற நானோ தொழிழ் நுட்ப கருத்துகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
இங்கு நானோ தொழில் நுட்பம் பற்றியும்,அதில் நடந்து வருகிற நவீன ஆராய்ச்சிகள் பற்றியும், நவீன நானோ தொழில் நுட்பத்தை விட சித்த மருத்துவ நானோ தொழில் நுட்பம் எங்ஙனம் மேலானது என்பது பற்றியும் தெளிவாக காண்போம்.
நானோ தொழில் நுட்பம்-அறிமுகம்:
நானோ = 10¯9(கிரேக்க வார்த்தை)
மூலக்கூறுக்களின் அளவு 10¯9 விட குறைவான அளவினையுடைய பொருட்களின் அமைப்பு பற்றி விளக்கும் அறிவியல், நானோ தொழில் நுட்பம் எனப்படும்.
நானோ மருத்துவம்:
மூலக்கூறுக்களின் அளவு 10¯9 விட குறைவான அளவினையுடைய பொருட்களின் மருத்துவ கூறுகளை பற்றி விளக்கும் அறிவியல், நானோ மருத்துவம் எனப்படும்.
நவீன நானோ தொழில் நுட்பம் – பயன்கள்:
நானோ தொழில் நுட்பம்
நோய்களை கண்டறிதல்
மருந்து கூட்டு தயாரித்தல்
விரைந்து உடலில் மருந்து உட்கிரகித்தல்
ஆகிய வகைகளில் பயனளிக்கிறது.
நானோ தொழில் நுட்பம் – நவீன ஆராய்ச்சிகள்;
- 1.நானோ கோல்ட் - (Nano Gold) - School of Medicine Sanfransico,வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் நானோ கோல்ட் புற்று நோய் செல்களை அறிந்து,அவற்றை அளிப்பதகாக கூறுகிறது.
2.நானோ சில்வர் - (Nano Silver)-London Institute of Research and Developement of Medicine,U.K. ,வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கையில் நானோ சில்வர் மிகச் சிறந்த நுண்ணுயிர் கொல்லியாக கூறப்படுகிறது.
நானோ சில்வர் மூலக்கூறுகளை கொண்டு நுண்ணுயிர் கொல்லி கண் துளி,பயன்பாட்டிலே உள்ள்து.
நானோ சில்வர் மூலக்கூறுகளை கொண்டு உருவாக்கப்பட்ட, நுண்ணுயிர் கொல்லி வீடியோகான் வாசிங் கருவிகளை பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே.
நானோ சிங்க்: (Nano Zinc) கிருமி நாசினியாக செயல்பட்டு,உடலில் வியர்வை துளியினால் உண்டாகும் கிருமி தொற்றினை நீக்குவதாக ஆராய்ச்சி கூறுகின்றதே.
சித்த மருத்துவத்தில் நானோதொழில் நுட்ப கருத்துகள்;
”அணுவினை துளைத்து ஏழுகடலையும் புகுத்தி” என்ற ஒளவையின் பாடலும்,
அணுவின் வடிவத்தினை கூறித்து கூறும்
”மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரமாயினால்
ஆவியின் கூறு நூறாயிரந் தொன்றுமே..”
திருமூலர் பாட்டு, நானோதொழில் நுட்பம் கூறித்த மிகச் சிறந்த கருத்து.
பசு மயிர்- 1/100/1000/10000 = 10-9 1 நானோ கூறு.
தமிழர்கள் பயன்படுத்திய மிக சிறிய அளவுகள்;
1. முக்கால்= ¾
2. அரை = ½
3. கால் = ¼
4. நாலுமா = 1/5
5. மும்மா முக்காணி = 3/16
6. மும்மா =3/20
7. அரைக்கா = 1/8
8. இருமா =1/10
9. மா = 1/16
10. முக்காணி = 3/80
11. அரைமா = 1/40
12. காணி = 1/80
13. அரைக்காணி = 1/160
14. முந்திரி = 1/320
15.கீழ்முக்கால் = 3/1280
16.கீழ்அரை = 1/640
17.கீழ்க்கால் = 1/1280
18.கீழ் நாலுமா = 1/ 1600
19. கீழ் மூன்று வீசம் = 3/5120
20. கீழரைக்கால் = 1/5120
21. கீழ் முக்காணி = 3/25600
22. கீழ் அரைமா = 1/12800
23. கீழ் காணி = 1/51,200
24. கீழ் முந்திரி = 1/1,02400
25. இம்மி = 1/10,75,200
26.அதிசாரம் = 1/18,38,400
சித்தமருத்துவமும் நானோ தொழில் நுட்ப ஒப்பீடு;
சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட பற்ப,
செந்தூர,சுண்ண,கட்டு,களங்கு மருந்துகளை,மிக்குறைந்த அளவில்,அனுபானம் மாற்றி வழங்கும் வேளையி பல நோய்களை குணப்படுத்துவது,அவற்றிலுள்ள நானோ கூறுகளே.அதிலும் குறிப்பாக தேரன் யமக வெண்பா முறையில் கூற்ப்பட்ட் அரைப்பு நாள்,வில்லை உலர்த்தல்,புட விபரம் வகையில் முடிந்த பற்ப,செந்த்தூரங்கள்,அனுபானம் மாற்றி வழங்கும் வேளையி பல நோய்களை குணப்படுத்துவது,அவற்றிலுள்ள நானோ கூறுகளின் தன்மை ஆகும்.
எடுத்துகாட்டாக, தேரன் யமக வெண்பா முறையில் முடிந்த வெள்ளி பற்பத்தினுடைய அளவு,காக்கை மூக்கின் நுனியில் 1/6 கூறப்பட்டுள்ளது.இது நிச்சயம் நானோ அளவினை விட சிறிய அளவில் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லையே.
தேரன் முறையில் முடிந்த மருந்துகள் அளவுகள்
1. எக்கு பற்பம் = 1/4கடலை
2. வங்க பற்பம் = 1/4கடலை
3.பலகரை பற்பம் = 1/4கடலை
4.அப்பிரக பற்பம் = 1/5 கடலை
5.காந்த பற்பம்= ¼ துவரை
6.வெள்வங்க பற்பம் = ¼ துவரை
7.இலிங்க பற்பம் = 1/8 துவரை
8.உப்பு பற்பம் = ¼ துவரை
9.இரச பற்பம் = 1 துவரை
10.அய பற்பம் = 1 சாமை
11.செம்பு பற்பம் = ¼ கடுகு
12.நாக பற்பம் = 1/6 அவரை
13.தங்க பற்பம் = 1/6 அவரை
14.தாளக பற்பம் = 1/8 ஓமம்
15.பவள பற்பம் = 1 மிளகு
16.முத்து பற்பம் = 1/6 அவரை
17.சங்கு பற்பம் = ¼ அவரை
18 கந்தக பற்பம் = 1/8 துவரை
இன்று உலக அளவில் பேசப்படும் நானோ நஞ்சு பற்றியும் நம் சித்தர்கள் விட்டு வைக்கவில்லை,என்பதை கடுகின் 1/4 கூறு நோய் நீக்கும் அரும் மருந்து- உத்தமம், 1கடுகு நச்சு-அதமம் என்பதே மிகச்சிறந்த எடுத்துகாட்டாகுமாம்
உலக சுகாதர நிறுவன ( W.H.O ) வலியுறுத்தல்படி,ஒவ்வொரு உலோக,உபரச,பாடாண வகைகளுக்கும் அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது.
1. ஆர்சனிக் – 5 P.P.M
2. குரோமியம் – 5 P.P.M
3. வெள்ளி - 5 P.P.M
4. ஈயம் – 5 P.P.M
5. பேரியம் – 100 P.P.M
6.பாதரசம் – 0.2 P.P.M
7.காட்மியம் – 1 P.P.M
(W.H.O.Standard for Metals in Food and Water)
சித்த மருந்துகள், நச்சு தன்மை உடையவை என்ற தவறான கருத்து உலக முழுவதிலும் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக உலோக,உபரச,பாடாண வகைகள்,பாதுகாப்பு அற்றவை என்ற கருத்துகளும் நிலவி வருகிறது.சித்த மருந்துகளை மிக மிக குறைந்த அளவில் வழங்கம் போது( நானோ அளவு குறைவாக) விரைவில் உட்கிரக்கிக்கப்பட்டு,மருந்து தன்மை விரவில் செயலாற்றும் என்பதும்,அவை நச்சுத்தன்மை அற்ற பாதுகாப்பான மருந்துகள் என்பதும் நானோ தொழில் நுட்ப மூலம் ஆய்வுகள்,இனி வரும் காலத்தில் நிரூபிக்கப்படும் என்பது உண்மை.
நவீன நானோ மருத்துவத்தை சித்த மருத்துவம் ஏன் சிறந்தது.
நவீன நானோ மருத்துவத்தில்,கருவிகளின் துணை கொண்டு நானோ மூலக்கூறுகளாக மாற்றுகின்றனர்.
சித்த மருத்துவத்தில்
1.கல்வத்தில் மூலிகை சாறு கொண்டு,மருந்தாக முடிக்க படுகிறது.அவ்வாறு,முடிக்கும் போது,அந்த மூலிகை சாறுகளின் மருந்து தன்மையும் கூடுதலாக கிடைக்கும்.
2.வில்லை வெப்பத்தில் உலர்த்த்ல்,வரட்டி புடம் இது போன்ற மருந்து செய்முறை பக்குவத்தால், முடிந்த மருந்துகளின் மருந்துத்தன்மை அதிககரிக்கிறது.
3.அனுபானம் மாற்றி வழங்கும்போது,ஒரே மருந்து பல நோய்களை போக்குவது சிறப்பு.
இத்தகைய சிறப்புகளால்,சித்த மருத்துவ மே, நவீன நானோ மருத்துவத்தை விட ஒருபடி மேலானது என்பதை உணர்த்தும்.
முடிவுரை:
சித்த மருத்துவம் அனைத்தும் முடிந்த முடிவு,அதை ஆய்வு செய்து நிரூபிக்க அவசியம் இல்லை.சரியான் முறையில் மருந்துகளை முடித்து,பயிற்சி செய்தலே போதுமானது.இது அடிப்படை வாதிகளின் வாதம்.
சித்த மருந்துகளின் சிறப்பினை நவீன அறிவியல் கொண்டு நிரூபிக்க வேண்டும்.இது நவீன் சித்த மருத்துவ சிந்தனையாளர்களின் வாதம்.
சித்த மருத்துவத்தின் சிறப்பு நானோ தொழில் நுட்பத்தின் மூலம்,அதன் தனித்தன்மை மாறாது நிரூபிக்கப்படும்போது,இரு தரப்பினரின் வாதமுமும் நிரூபிக்கப்பட்ட்டு,சித்த மருத்துவம் உலகின் தலைமை மருத்துவமாக வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை..