Wednesday, July 27, 2011

சித்த மருந்துகளின் பரிசோதனைகள்


சித்த மருந்துகளின் பரிசோதனைகள்

1.பற்ப செந்தூரங்களின் பொதுவனான சோதனை:
விரலின் ரேகை பற்ப செந்தூரங்களில் பதிய வேண்டும்.
2.சுண்ணங்களின் பொதுவனான சோதனை:
 சுண்ண வகைகளை மஞ்சள் விட்டு நீர் விட்டு கலக்கும்போது,சிவப்பு வர வேண்டும்
3.வங்க பற்ப சோதனை:
வங்க பற்பம் – 1 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
4. நாக பற்ப சோதனை:
நாக பற்பம் 2 பங்கு படிகாரம் – 1/8 பங்கு, நவாச்சாரம் - 1/8 பங்கு இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
5.வெள்ளி பற்ப சோதனை:
வெள்ளி பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
6.தங்க பற்ப சோதனை:
·         தங்க பற்பம் 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,செம்புத்தூள் - 1/4பங்கு, இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத வெட்டையாகும்.இவ்வெட்டையை, கரி நெருப்பிலிட்டு முன் போலவும் ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         உலோகத்திற்குள்ள எந்த மினுமினுப்பும் இருக்க்கூடாது
7. தாம்பிர பற்ப சோதனை;
·         தாம்பிர பற்ப - 1 பங்கு, வெங்காரம் – 1/4 பங்கு, கருவங்கம் - 1/4பங்கு,இவ்வகைகளை கல்வத்தில் அரைத்து,மூசையில் வைத்து ஊத,மருந்து சரியான முறையில் முடியாத போது,உலோகம் இருந்தால் உருகி வெளிவரும்.
·         தாம்பிர பற்ப முடிந்த்தாயின்,கனிந்த வாழை பழத்தில் சிறிது பற்பத்தை வைத்து,1 இரவு கழித்து எடுக்க வாழைபழம் கல் போல் இறுகியே காணும்.

8.அயச்செந்தூர சோதனை:
 அயச்செந்தூரம் முடிந்த்தாயின், நீரிலிட்டால் மிதக்கும்.அது காந்த்திற்கு ஒட்டக் கூடாது.
9.அப்பிரக சோதனை
·         அதில் தளுக்கு இருக்க கூடாது.
·         விரிசல் விழுந்த மட்கலயத்தில் நீர் விட்டு அதினுள்,அப்பிரக பற்ப இட நீர் கசிவு இருக்க்கூடாது.
10.மிருதார் சிங்கி பற்ப சோதனை:
இரும்பு கரண்டியிலிட்டு சிறிது,வெங்காரம், நல்லெண்ணெய் விட்டு எரிக்கவும்.ஈயம் வர கூடாது

2 comments:

  1. கந்தக பற்ப சோதனை

    ReplyDelete
  2. Play at Online Casinos in CA
    Online casino games 카지노사이트 available at many クイーンカジノ of the top rated sites. · Play at online casino sites in CA. · Join happyluke Now · Get started · Get a Sign Up Bonus.

    ReplyDelete