1.கற்றாழை என்கிற குமரி
நான்தானுங்க!சோத்துக்கத்தாழைங்கிற கற்றாழை பேசுறேங்க, அட...என்னாப்பா! நம்ம வீட்டில இருக்க சோத்துக்கத்தாழை என்னாடா சொல்லப்போறேன் தானே பாக்கரீங்க!! கொஞ்சம் கவனமா கேளுங்க!
சோத்துக்கற்றாழைனு சொல்லுற கற்றாழையாகிய என் தாவரவியல் பெயர்-Aloe veera. நான் இலையில் உணவை சேமித்து வைக்கும் ஒரு வகையான செடியை சேர்ந்தவன். நீர் இல்லாத இடத்தில்கூட வளரக்கூடியவன்.
எனக்கு குமரி என்ற வேறு பெயரும் உண்டு.அதற்கு இரண்டு வகையான காரணங்கள்.
1.உலகிலே முதன் முதலில் மனிதர்கள் தோன்றியதாக கருத்தப்படும் லெமூரியா கண்டம் எனப்படும் குமரி கண்டம் என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர், குமரி கண்டம் என பெயர் வருவதற்கு குமரி என்ற கற்றாழை அதிகம் இருந்ததே காரணம்.
2.இளம் பெண்கள்ளுக்கு குமரி என்ற இன்னுமொரு பெயரும் உண்டு. இளம் பெண்கள்ளுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு நான் நல்ல மருந்து.
சரிங்கஅறிமுகம்லாம் போதுங்க,இனி என்னை எப்படி வீட்லயே பயன்படுத்தலாம்னு பாக்கலாங்க....
பயன்படுத்தும் முறைகள்:
தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும்.அடுத்து என்ன கேக்கரிங்கனு புரியுது!!ஏன் கழுவனும்தானே...கற்றாழை சோற்றில் Aloin என்ற வேதிப்பொருள் இருக்குங்க, கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுமுங்க!!
மருத்துவ பயன்கள்;
1.என்னுடைய சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.
2. குமரி பூச்சு - அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.
3. குமரி களிம்பு - முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் நான் சேருகிறேன். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.
4. குமரி பக்குவம் - இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.
5. குமரி எண்ணெய் - என்னுடைய சோற்றை,எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி,தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும்.தூக்கம் சிறப்பாக வரும்.
6.என்னைக்கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும்.
7.மூட்டு வீக்கத்திற்கு,மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.
மருந்துகள்;
1.குமரி இளகம் 2.மூசாம்பர மெழுகு 3. கற்றாழை மணப்பாகு
No comments:
Post a Comment