Sunday, September 26, 2010

குழந்தை பாக்கியம் தரும் - துரியன்



 குழந்தை பாக்கியம் தரும் - துரியன

குன்னூர் பர்லியார் தோட்டக்கலைப் பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் துரியன் பழ மரங்கள் உள்ளன. ஆண்டு தோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முதல் சீசன் துவங்கும். இப்பழங்கள் குழந்தை பாக்கியம் தரும் ஆற்றலை கொண்டது என நம்பப்படுகிறது. உள்ளூர் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் முன்பதிவு செய்து துரியன் பழத்தை வாங்கி செல்கின்றனர். தற்போது, பர்லியார் பழப்பண்ணையில் உள்ள 33 மரங்களிலும் துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளன; இவற்றில் 13 மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த சீசனில் சுமார் 500 கிலோ பழங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. Courtesy- DHINANMALAR.com

                                                                              என்றும் அன்புடன்,

                                                                                       சித்த மருத்துவன்

                                                                                     ரெ.மாணிக்கவாசகம்



                                                                                                       


Monday, September 20, 2010

மருத்துவ பழமொழிகள்

      மருத்துவ பழமொழிகள்

1.ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன்-ஆயிரம் வேரை கொன்றால் அரை வைத்தியன் என்பதே உண்மையான பழமொழி.சித்த மருத்துவ துறையினுள் நிபுணராவதற்கு குறைந்ததே,ஆயிரம் மூலிகை வேர்களையவது மருந்து செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டியதை உணர்த்தவே,மேற்கண்ட பழமொழி.

2.ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்-ஆன்மீக அடிப்படையாக தெரிந்தாலும்,மகப்பேறு இல்லாத மகளிர்களுக்கு சொல்லப்படும் இந்த பழமொழி.ஆலமரக் கொழுந்து,மகளிருடைய கருப்பையில் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்க்க் கூடியது. ஆலமரக் கொழுந்தை பாலில் அரைத்து சாப்பிட,பெண்களுக்கு கருப்பைக் குற்றம் நீங்கி,குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே பழமொழி.

3.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்-மிளகு உணவில உள்ள நச்சுத் தன்மையை போக்குவதில் சிறந்த்து. நமக்கு பிடிக்காத பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவாக இருந்தாலும்,உணவிலுள்ள நச்சுகளை போக்கும் என்பதே பழமொழி.

4.ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்- அதிவிடயம் என்ற மூலிகை கழிச்சலுக்கு சிற ந்த்தது.பொங்கி வரும் ஆற்று நீரை எவ்வாறு அணை கட்டி நிறுத்துகிறோமோ,அதுபோல மிகுதியாக வரும் கழிச்சல் நோய்களை அதிவிடயம் நிறுத்தி பயன்தரும் என்பதே பழமொழியின் பொருள்.

5.அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்-கழுதை பாலை, குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு சமமாக கொடுகக்லாம்.தாய்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும்,கழுதைப்பாலில் உள்ளது.


                                                                       என்றும் அன்புடன்,

                                                                                              சித்த மருத்துவன்

                                                                                             ரெ.மாணிக்கவாசகம்

Saturday, September 18, 2010

முருங்கையின் மருத்துவ பயன்கள்;


  

தோழர்! ராம் குமார் கேள்விகளுக்கு பதிலாக கட்டுரை தரப்படுகிறது.

முருங்கையின் மருத்துவ பயன்கள்;


 

முருங்கையின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பிஞ்சு,பிசின் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளது.

 

முருங்கை இலை:

            வெந்து கெட்டது அகத்தி கீரை வேகாமல் கெட்டது முருங்கைக்கீரை- இது பழமொழி.முருங்கை கீரையை நன்றாக வேக வைத்தே உண்ண வேண்டும்,வேகவில்லையென்றால் செரிமான கோளாறை உண்டாக்கும்.

 

முருங்கை இலையின் சத்துப்பொருட்கள்;




ü      இதில்,ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி விட,7 மடங்கு

ü      கேரட்டில் உள்ள விட்டமின் ஏ விட,4 மடங்கு

ü      பாலில் உள்ள கால்சியம் அளவை விட,4 மடங்கு

ü      வாழைபழத்தில் உள்ள பொட்டாசிய அளவை விட,3 மடங்கு

ü      ஷ்பைனக் கீரையில் உள்ள இரும்பு அளவை விட,3 மடங்கு

ü      பாதாம் பருப்பில் உள்ள விட்டமின் இ விட,3 மடங்கு

இத்துனை,சத்துப்பொருட்களைக் கொண்டுள்ளது.

 

 குறிப்பு: சிறு நீரகக் கல்லடைப்பு நோயாளிகள், கால்சியம் அளவு அதிகம் உள்ளதால் அவர்கள் இக்கீரையை சாப்பிடக்கூடாது.

 

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்:

1.முருங்கை இலையோடு,2திரி பூண்டு,மஞ்சள்,உப்பு,மிளகு சேர்த்தரைத்து உண்ண நாய்க்கடி தீருகிறது

2.இலைச்சாறு கண்ணில் விட,கண்வலி தீரும்.

3.இலைச்சாற்றில்,சிறிது வெடியுப்பு சேர்த்துத் தர,சிறு நீர் பெறுகும்.

4.இலைச்சாறு+மிளகு சேர்த்து தலைவலிக்கு நெற்றியில் பற்றிட தீர்கிறது.

5.இலைச்சாறை பூசினால் வீக்கம் குறையும்.

இலைச்சாறை நாட்பட்ட புண்களுக்கு பூச விரைவில் ஆறி விடும்.

 

 முருங்கைப்பூவின் மருத்துவ பயன்கள்;




         முருங்கைப்பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட,உடல் வன்மை,ஆண்மை பெருக்கும் உண்டாகும்.

 

                     

முருங்கை பிஞ்சின் மருத்துவ பயன்கள்:



என்பு வெப்பம்,என்பு சுரம்,தாது நட்டம்,சுவையின்மை தீரும். வெப்பத்தை தணித்து ஆண்மையை தரும்.

 

முருங்கை காயின் மருத்துவ பயன்கள்:


 

ஆண்மையை தரும்.உடலுக்கு ஊட்டச்சத்தினை தருகிறது.

RECENT RESEARCHES IN MORINGA PLANT.

1. Moringa has been shown in studies to have an anti-tumor capacity. Moringa contains benzyl isothiocyanate. There are many studies that have shown this chemical and compounds derived thereof to have anti-cancer and chemoprotective capabilities. This chemoprotective aspect is critical for those who are battling cancer; this helps strengthen cells so that they can tolerate chemotherapy. 

 

                  2.The research found that the Moringa leaves posses substances that have antinociceptive and anti-inflammatory activities, in fact they found that it has high quantities of this substances. This means that Moringa Oleifera use in Indian traditional medicine as a treatment of ailments, particularly those related to pain and inflammation was just.

 3. Moringa Oleifera to treat and manage the symptoms of diabetes for years.

 

 4. f or many centuries Moringa Oleifera was used in traditional medicine, as a treatment Arthritis and Gout. It was believed that Moringa Leaf Powder reduce inflammations and pain caused by these conditions   


                                                               என்றும் அன்புடன்...

                                                              சித்த மருத்துவன்

                                                            ரெ.மாணிக்கவாசகம்

Friday, September 17, 2010

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு சித்தமருத்துவம்

தோழர் தங்கராசு கேள்விகளுக்கு பதிலாக தகவல்கள் தரப்படுகிறது.

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி மற்றும்      காய்ச்சலுக்கு சித்தமருத்துவம்

வெயில் காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும்போதும், குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போதும் பரவலாகவே நோய்கிருமி தொற்று மனிதர்களுக்கு ஏற்படுகிறது.வைரசு மற்றும் பாக்ட்டீரிய நுண்கிருமிகளின் தொற்று இந்த காலங்களில் ஏற்படுகின்றது. இந்த காலங்களில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைந்து இருப்பது மட்டுமின்றி, நுண்கிருமிகள் உடலில் தொற்ற ஏதுவான சூழ் நிலை உருவாகிறது.இதனால் சளி,இருமல்,சுரம் போன்ற நோய்கள் மனிதர்களுக்கு உண்டாகிறது.

 

ü    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளிக்கு சித்த மருத்துவம்

1.    1டம்ளர் பாலில்,1 தேக்கரண்டி மிளகு பொடி, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடியைச் சேர்த்து பனை வெல்லம் கலந்து சாப்பிடவும்.

2.    துளசி சாறு 60மி.லி சாப்பிடவும்.

3.    ஆடாதொடை சாறு 60மி.லி சிறிது தேன் கலந்து சாப்பிடவும்.

 பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலுக்கு சித்த மருத்துவம்

 

1.    நிலவேம்பு கசாயமாக வைத்து சாப்பிட்டு வர 2வேளையில் குணம்தரும்.சிக்குன்குனியா,பன்றிக்காய்ச்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கும் நல்ல மருந்தாகும்.மேலும்,இவை வராமல் தடுப்பதற்கு முன்னெச்செரிக்கையாக கசாயத்தை குடிக்கலாம்.

2.    மிளகினை கசாயமாக வைத்து குடித்து வந்தலும் சுரம் குறையும்.

 

குறிப்பு:

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சளி,காய்ச்சலுக்கு தாளிசாதி சூரணம்,திரிகடுகு சூரணம்,வச்சிரகண்டி மாத்திரை,ஆடாதொடை மணப்பாகு,திப்பிலி ரசாயணம் போன்ற மருந்துகளை சித்தமருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ளவும்.

 

 

                                                                                         என்றும் அன்புடன்....

                                                                                            சித்த மருத்துவன்

                                                                                         ரெ.மாணிக்கவாசகம்


மல்லிகையின் மருத்துவ பயன்கள்


தோழர் ராம்குமாரின் கேள்விகளுக்கு பதிலாக தகவல்கள் தரப்படுகிறது.

மல்லிகையின் மருத்துவ பயன்கள்






1.மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல,வாய்ப்புண் தீரும்.

2.இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது.

3. இலைச்சாறு,காலாணியை நீக்கும்.

4.இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றடமிட தொண்டை நோய் தீரும்.

5.மல்லிகையின் பூவுடைய எண்ணெய்,தலையில் தேய்த்து முழுகினால்,உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

6. மல்லிகை எண்ணெய் தலையில்தேய்த்து முழுகிவர தலைவலி,தோலை பற்றிய நோய்கள்

கண்னெரிச்சல் தீரும்.

7. பூவை அரைத்து பூச,வீக்கம் குறையும்.

8. பூவை மார்பில் வைத்துக்கட்ட,பால் சுரப்பு நிற்கும்.

9. பூவை அல்லது இலையை அரைத்து,தொடையிடுக்கு,குறி உறுப்புகளில் பற்றிட கலவி இன்பம் பெருகும்.

10.மல்லிகை வேர்த்தூளையும்.வசம்புத்தூளையும் பழச்சாறு கலந்து பூச தோல் நோய்கள் தீரும்.

                                                                               என்றும் அன்புடன்....

                                                                               சித்த மருத்துவன்

                                                                           ரெ.மாணிக்கவாசகம்.

Wednesday, September 15, 2010

மூலிகை பேசுகிறது


          1.கற்றாழை      என்கிற         குமரி             




                  

  நான்தானுங்க!சோத்துக்கத்தாழைங்கிற  கற்றாழை பேசுறேங்க, அட...என்னாப்பா! நம்ம வீட்டில இருக்க சோத்துக்கத்தாழை  என்னாடா சொல்லப்போறேன் தானே பாக்கரீங்க!! கொஞ்சம் கவனமா கேளுங்க!

                          சோத்துக்கற்றாழைனு சொல்லுற கற்றாழையாகிய என் தாவரவியல் பெயர்-Aloe veera. நான் இலையில் உணவை சேமித்து வைக்கும் ஒரு வகையான செடியை சேர்ந்தவன். நீர் இல்லாத இடத்தில்கூட வளரக்கூடியவன்.

எனக்கு குமரி என்ற வேறு பெயரும் உண்டு.அதற்கு இரண்டு வகையான காரணங்கள்.

1.உலகிலே முதன் முதலில் மனிதர்கள் தோன்றியதாக கருத்தப்படும் லெமூரியா கண்டம் எனப்படும் குமரி கண்டம் என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர், குமரி கண்டம்  என பெயர் வருவதற்கு குமரி என்ற கற்றாழை அதிகம் இருந்ததே காரணம்.

2.இளம் பெண்கள்ளுக்கு குமரி என்ற இன்னுமொரு பெயரும் உண்டு. இளம் பெண்கள்ளுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு  நான் நல்ல மருந்து.      

சரிங்கஅறிமுகம்லாம் போதுங்க,இனி என்னை எப்படி வீட்லயே பயன்படுத்தலாம்னு பாக்கலாங்க....

பயன்படுத்தும் முறைகள்:

தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ள வேணும்.அடுத்து என்ன கேக்கரிங்கனு புரியுது!!ஏன் கழுவனும்தானே...கற்றாழை சோற்றில் Aloin என்ற வேதிப்பொருள் இருக்குங்க, கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுமுங்க!! 

 

மருத்துவ பயன்கள்;

1.என்னுடைய சோற்றை உள்ளுக்கு கரண்டியளவு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும்.

2. குமரி பூச்சு - அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

3. குமரி களிம்பு - முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும்  நான் சேருகிறேன். சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம்.முகம் பளபளப்பாக மாறி விடும்.

4. குமரி பக்குவம் - இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து,கரண்டியளவு சாப்பிட தீரும்.

5. குமரி எண்ணெய் - என்னுடைய சோற்றை,எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி,தலைக்கு தேய்த்து வர முடி  நன்றாக கருமையாக வளரும்.தூக்கம் சிறப்பாக வரும்.

6.என்னைக்கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை ரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும்.

7.மூட்டு வீக்கத்திற்கு,மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

மருந்துகள்;

     1.குமரி இளகம் 2.மூசாம்பர மெழுகு 3. கற்றாழை மணப்பாகு

 

அறிமுகம்

             வணக்கம். நண்பர்களே! "சித்த மருத்துவ களஞ்சியம்" என்ற இந்த புதிய பிளாக் மூலம் சித்த மருத்துவம் தொடர்பான கட்டுரைகள்,மூலிகை பயன் குறித்த தகவல்கள், நோய்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை போன்றவை பற்றி தகவல்கள் அளிக்க உள்ளேன்,மேலும் சித்த மருத்துவம் பற்றிய தங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தளமாகவும் தாங்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு விளைகிறேன். நன்றி!

                                                     என்றும் அன்புடன்,

                                                                            சித்த மருத்துவன்

                                                    ரெ.மாணிக்கவாசகம்